தமிழ் மக்களின் பிதா டி.எஸ்.சேனநாயக்க அல்ல; தந்தை செல்வாவே! – ஆக்ரோசமான சாணக்கியன்

இலங்கையின் பிதா என்று அழைக்கப்படும் டி.எஸ்.சேனநாயக்க இலங்கைக்கு மட்டும் தான் பிதா எனவும் தமிழர்களுக்கு அவர் பிதா இல்லை என்றும் தமிழர்களின் பிதா தந்தை செல்வா என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை இருள்சூழ்ந்த சுதந்திரம் என பிரகடனப்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன் கடன் இல்லாத நாட்டையும் தமிழர்தளின் தலை எழுத்தையும் பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் ஒப்படைத்திருந்ததாகவும், ஆனால் இன்று நாடு வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டதாக இரா.சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்த நாட்டிற்கு அதிகமான அந்நியச்செலாவாணியை ஈட்டித்தருகின்ற மலையக தமிழ் மக்களின் குடியுரிமையை பறித்தவர் டி.எஸ்.சேனநாயக்க என்றும் எனினும் 75 ஆண்டுகள் கடந்தும் அதிகளவான அந்நிய செலாவாணியை ஈட்டித்தருவது மலையக தமிழர்கள் என்பதை பெருமையுடன் கூறுவதாக இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அன்று தமிழர்களை அடித்து காலைத்தார்கள் ஆனால் இன்று நாட்டின் மிகசிறந்த அறிவாளிகள் எல்லாம் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டே வெளியேறுவதாகவும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply