திருமலையில் இடம்பெற்ற 75ஆவது சுதந்திர தின நிகழ்வு!

இலங்கை நாட்டின் 75 ஆவது சுதந்திர தினமான இன்று (04) தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த சுதந்திர தின வைபவத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்ட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 
 சகல உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு அலுவலக வளாகத்தில் மரங்களையும் நட்டு வைத்தனர்.
இதனை தொடர்ந்து தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியின் மீரா நகர் அல் ஹிக்மா முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் அறபா விளையாட்டு கழகம் ஊடாக சுதந்திர தினம் இடம் பெற்றது பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி கலந்து கொண்டதுடன் பாடசாலை வளாகத்தினுள் மர நடுகையும் இடம் பெற்றது. பாடசாலை மாணவர்களால் பிரதம அதிதி பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார்.
இதன் போது உரையாற்றிய பிரதேச செயலாளர், நாட்டு நிலமைகளில் நாம் கல்வி நடவடிக்கைகள் உட்பட பாடசாலை கட்டிடங்கள் என்பன இலவசமாக பெற்றுள்ளோம் பெற்று வருகிறோம் இந்த நாட்டுக்கு நாம் என்ன செய்துள்ளோம் என்பதை ஒரு கனம் சிந்திக்க வேண்டும் இந்த சுதந்திர நாளில் நம்மை நாமே வளப்படுத்தி இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களாக முன்வர வேண்டும் என அனைவரையும் வாழ்த்துகிறேன் என்றார்.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பொலிசார்,பெற்றார்கள்,இளைஞர் கழகங்கள்,சிவில் அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply