இந்திய நலன்களுக்காக கொண்டுவரப்பட்டதே 13ம் திருத்தம் – சர்வாதிகார ரீதியில் கறுப்புக்கொடி போராட்டம் என்கிறார்.!

13வது திருத்தச்சட்டம் இலங்கை தமிழருக்காக கொண்டுவரப்பட்ட சட்டம் இல்லை எனவும் அது இந்தியாவின் நலன்களுக்காகவே கொண்டுவரப்பட்டதாக யாழ்ப்பாணம் பொது அமைப்புகளின் பிரதிநிதி அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

பாரத மக்களை மதிப்பதாகவும் ஆனால் இந்தியாவின் வெளிவிவகார கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்

பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பகுதியில் தேசிய கொடியை தாங்கியவாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், மோட்டார் சைக்கிள் மற்றும் கொடிகளை மக்கள் தாங்கியவாறு யாழ் நகரை சுற்றி வலம் வந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

தமக்கான தீர்வுகளை தம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதனை எவரும் திணிக்கத்தேவையில்லை என்றும் அருண் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் தொடர்ந்து மக்களை ஏமாற்றி சர்வாதிகார ரீதியான கறுப்புக்கொடி சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அரசியல்வாதிகள் தமது சுய லாபத்திற்காக  இவ்வாறான செயற்பாடுகள் ஈடுபட்டு வருவதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Leave a Reply