நாட்டில் தற்போது பல கொலைச்சம்பவங்களும் தற்கொலை சம்பவங்களும் நடடைபெற்றுக்கொண்டிருக்கும் செய்தி ஊடகம் வாயிலாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
வீடொன்றில் இருந்து 3சடலம் மீடக்கப்பட்ட சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது வீடொன்றில் இருந்து தந்தை, தாய் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் 28 வயதான தந்தை, 28 வயதான தாய் மற்றும் 10 வயதுடைய மகனின் சடலங்களே இவ்வாறு கல்கமுவ பகுதியிலள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
தாயையும் மகனையும் கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாமென பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.