கலைஞர் கருணாநிதியின் 3ஆம் வருட நினைவேந்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.

சென்னை- மெரீனாவிலுள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது அங்கு வருகைதந்திருந்த அமைச்சர்கள், தி.மு.க.நிர்வாகிகள், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

Leave a Reply