கொரோனா மரணங்கள் அதிகரிப்பு: பிணவறைகளில் துர்நாற்றம்

பாணந்துறை வைத்தியசாலையின் பிணவறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கொழும்பை மையமாக கொண்டு இயங்கும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இதன்படி, பாணந்துறை வைத்தியசாலையின் பிணவறையில் 22 கொரோனா சடலங்கள் உட்பட 45 சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளது.

அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிணவறையில் சடலங்கள் வைப்பதற்கு இடமில்லாததால் வெளியே வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெரும்பாலான சடலங்கள் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.

இதனால் குறித்த பிரதேசத்தின் சுடுகாடுகளை 24 மணித்தியாலங்கள் முழுவதும் திறந்து வைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply