கொரோனா தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு கண்டி முதல் கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்டு வந்த ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி பஸ்யாலை பகுதியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, டெல்டா திரிபு நாட்டில் வேகமாக பரவிவரும் சந்தர்ப்பத்தில் போராட்டங்களை நிறுத்துமாறு இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஆசிரியர்கள், அதிபர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
டெல்டா திரிபின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலை கொள்ளளவை விடவும் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பேரணிகளால் அதிகளவில் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.