வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது

கடந்த சில காலமாக வீதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தரின் தொலைபேசி, 50 ஆயிரம் ரூபா பணம், கைப்பையை திருடி சென்றமை, யாழிலுள்ள பத்திரிகை நிறுவனத்தில் கடமையாற்றும் ஒருவரின் கைத்தொலைபேசியினை திருடிசென்றமை, சுன்னாக பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கைப்பை, இரண்டு தொலைபேசி மற்றும் முப்பதாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றமை, மானிப்பாயில் ஒருவரின் கைப்பை திருடியமை ஆகிய பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொள்ளையிடப்பட்ட பணம், கைப்பை மற்றும் ஏனைய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

போதைப்பொருட்களுக்கு அடிமையான காரணத்தினாலேயே இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யபட்ட இருவரும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply