தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கையில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீவீரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நுகர்வோருக்கு தேவையான தேங்காய் எண்ணெயில் 80 சதவீதமானவை இறக்குமதி செய்யப்படுகிறது.

இதற்காக பல மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

வருடாந்தம் தேவைப்படும் 2 இலட்சத்து 40 ஆயிரம் மெற்றிக் டன் தேங்காய் எண்ணெயில், 20 சதவீதமானவை உள்ளூர் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.

தெங்கு உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

40 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் அண்மையில் நாடளாவிய ரீதியில் உள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன.

தெங்கு பொருட்களின் ஏற்றுமதி மூலம் கடந்த வருடம் 66 கோடியே 10 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்திருந்தது.

அதேவேளை, இந்த வருட இறுதியில் ஏனைய தெங்கு பொருள் ஏற்றுமதி மூலம் 77 கோடி அமெரிக்க டொலர்களை வருவாயாக பெற முடியும் என எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply