யாழ் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பரவிய டெல்டா; இதுவரை 124 பேர் அடையாளம்

இலங்கையில் யாழ்ப்பாணம் 11 மாவட்டங்களில் 124 பேர் இதுவரை டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தகவலை சுகாதார அமைச்சின் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் வெளியிட்டுள்ளார்.

அதன்படி நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட டெல்டா திரிபடைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்து்ளது.

Advertisement

ராகம, கடவத்த , கொழும்பு ,அங்கொடை, கொட்டிகாவத்தை, பியகம, நுகேகொடை, பொரலெஸ்கமுவ, கல்கிசை ,மஹரகம, பிலியந்த, பண்டாரகம ,பாணந்துறை ,காலி, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, அம்பாறை ,குருநாகல், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலேயே டெல்டா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply