அனுமதியின்றி மாற்றப்பட்டுள்ள சுதந்திர தின முத்திரை! எழுந்த சர்ச்சை

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுதந்திர முத்திரையை முத்திரை பணியக அதிகாரிகள் தனது அனுமதியின்றி மாற்றியுள்ளதாக முத்திரை வடிவமைப்பாளர் கலைஞர் சனத் ரோஹன விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசியக்கொடியையும், சுதந்திர சதுக்கத்தையும் வெள்ளை பின்னணியில் வரைந்த முத்திரை, முத்திரைப் பணியக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பழுப்பு நிற பின்னணியில் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முத்திரையை வெளியிடுவதற்கு முன்னர் அரசாங்க அச்சகத்திடம் நிலையை அவதானிக்க அனுமதி கோரிய போதும், அச்சகத்துக்குள் நுழைய விடாமல் அதிகாரிகள் தடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பாரம்பரியமாக முத்திரையை உருவாக்கும் கலைஞரின்றி வேறொருவரைப் பயன்படுத்தி முத்திரை உருவாக்கப்பட்டுள்ளமையினால் இது தொடர்பில் அதிகபட்ச சட்டக்கட்டுப்பாடுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்தை மாற்றியமையால் துக்கத்தினால் உயிரையே இழந்த ஆனந்த சமரக்கோன் போன்ற பெறுமதியான வளங்களை இழந்த வரலாற்றைக் கொண்ட நாட்டில் சுதந்திர தின முத்திரை வடிவமைப்பாளர் சுதந்திர தினத்தை இரசிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *