யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் இரண்டு ஆலயங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூடப்பட்டுள்ளன.
பருத்தித்துறை சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், பருத்தித்துறை சிவன் ஆலயம் ஆகிய ஆலயங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த இரு ஆலயங்களிலும் அதிகளவானோர் ஒன்று திரண்டமை, முகக்கவசங்கள் அணியாதது, சுகாதார விதிமுறைகளை மீறி வெளிவீதியில் திருவிழாவை நடத்தியமை போன்ற சுகாதார விதிமுறைகளை மீறப்பட்டிருந்தன.
இதன்படி சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியதால் குறித்த இரு ஆலயங்களும் எதிர்வரும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

