கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு..!

கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் கிண்ணியா பொலிஸ் பரிவிற்குட்பட் உப்பறு பாலத்திற்கருகில் குளிக்கச் சென்ற நிலையிலே இவ்வாறு சடலமாக மீடக்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் இன்று(07) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா பைசல் நகர் தாமரைவில் பகுதியைச் சேர்ந்த மௌஜுத் பர்ஸான் (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது மூன்று இளைஞர்கள் கடல் குளிப்பதற்காக சென்ற போது அதில் ஒருவர் நீந்த முடியாத நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவரது சடலம் பொதுமக்கள், மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு மீட்கப்பட்ட சடலம் தற்போது கடற்கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் திடீர் மரண விசாரனை அதிகாரி சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Leave a Reply