6 நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்கு!

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த ஏழு நிலக்கரி கப்பல்களில் 6 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போது நிலவும் மின்வெட்டுகளின் கீழ் பெப்ரவரி மாதம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி இருப்பு போதுமானது என அதன் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.

மேலும், பெப்ரவரி மாதத்தில் 07 நிலக்கரி கப்பல்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இம்மாதம் 05 கப்பல்கள் மட்டுமே நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையில் இருந்து நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் இலங்கை நிலக்கரி நிறுவனம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், ஜனவரி 30 முதல் பெப்ரவரி 03 வரையான காலப்பகுதியில் நிலக்கரிக்காக 12.32 மில்லியன் டொலர்கள் அதாவது 4.56 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒரு பகுதியை சப்ளையர்களுக்கு செலுத்த முடியும் என்றாலும், வேறு சில கப்பல்களுக்கு முன்பணம் மற்றும் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என நிலக்கரி நிறுவனம் உரிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Leave a Reply