இழந்தவைகளை ஈடுசெய்யக்கூடிய வகையில் பேரணி பேரெழுச்சி பெறும் – அருட்பணி றொபேட் சசிகரன் ஆசி!

தமிழ் மக்கள் இழந்துள்ள சுதந்திரம் இழந்த இழப்புக்கள் இவற்றினை ஈடுசெய்யக்கூடிய வகையில் இந்த பேரணி வெற்றியடைய வேண்டுமென  அருட்பணி றொபேட் சசிகரன் நல்லாசி வழங்கியிருந்தார்.

இலங்கையின் இன்றைய சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு ஆசி வழங்கி ஆரம்பித்து வைத்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்த பேரணியில் மக்கள் பேரெழுச்சியாக எழுந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச்சேர்க்க வேண்டுமென அருட்பணி றொபேட் சசிகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Leave a Reply