கடவுச்சீட்டுகளை டிஜிட்டல் மையப்படுத்தும் நடவடிக்கை! வெளியான புதிய அறிவிப்பு

கடவுச்சீட்டுகளை டிஜிட்டல் மையப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், பல்வேறு காரணங்களுக்காக அந்த பணிகள் தாமதித்துள்ளன.

உலக நாடுகள் மத்தியில் இலங்கையின் கடவுச் சீட்டுக்கு மதிப்பேற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்குவதற்கான கேள்வி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும், 8 மாதங்களுள் இந்த பணிகள் நிறைவு செய்யப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது

Leave a Reply