வவுனியாவில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு ஆடையின்றி வீடு தாவும் புது பூதம்

வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு ஆடையின்றி நிற்கும் சிலர் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்து சில்மிசம் செய்வதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்கள் , குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்து அங்கு தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகொள்ள முற்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் மர்ம மனிதர்களின் அட்டூழியங்கள் கடந்த இருவாரங்களாக அதிகரித்த நிலையில் மதவுவைத்த குளத்தில் வாழும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பிரதேசவாசிகள் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரிடம் நேற்று முன்தினம் (05) முறைப்பாடு செய்துள்ளதுடன், மர்மமனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் இரவு நேரங்களில் இருக்க முடியாது எனவும் பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்

Leave a Reply