பெலாரஸ் நாட்டில் உயர் கல்வி வாய்ப்பு! இலங்கை மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

பெலாரஸ் நாட்டின் தூதுவர் மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பெலாரஸ் நாட்டின் தூதுவர் ANDREI I.RZHEUSSKY இலங்கைக்கும் வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில், கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும், பெலாரஸ் தூதுவருக்கும் இடையில் கல்வியமைச்சில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் உயர்கல்வி மேம்பாட்டுக்காக, பெலராஸில் உயர்க் கல்வி வாய்ப்புக்களை வழங்குவது குறித்தும்,  இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பெலாரஸ் நாட்டின் உயர்கல்வி வாய்ப்புகளுக்காகவும் பெலாரஸ் அரசாங்கத்தின், இலங்கைக்கான ஆதரவிற்காகவும் பெலாரஸ் தூதுவருக்கு சுசில் பிரேமஜயந்த இதன்போது நன்றி தெரிவித்தார்.

கல்வியமைச்சர் உடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து,  பெலாரஸ் தூதுவர் தொழில் பயிற்சி அதிகாரசபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை, திறன் அபிவிருத்தி நிதியம், உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனம், NSBM பசுமை பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த நிறுவனங்களை பெலாரஸ் உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைத்து வெளிநாட்டுத் தகுதிகள் மற்றும் அங்கீகாரம் கொண்ட படிப்புகளை இலங்கை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *