டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா- உக்ரைன் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணம்- சம்பிக்க

டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா, உக்ரைன் மற்றும்  இந்தியா ஆகிய சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சுற்றுலாப்பயணிகளின் வருகையைத் தொடர்ந்தே டெல்டா பரவல் தீவிரமடைந்துள்ளமையினால், இந்த விடயம் தொடர்பாக புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென சம்பிக்க ரணவக வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தற்போது நாடு, 4ஆவது அலை கட்டுப்பாட்டை மீறி பாரதூரமான நிலைமை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த எமக்கு இது ஒரு பாரிய பிரச்சினையல்ல என கூறி, அசமந்த போக்குடன் அரசாங்கம் செயற்பட்டமையே நாடு இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டுள்ளமைக்கு காரணமெனவும் சம்பிக்க ரணவக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *