லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு? வெளியான அறிவிப்பு

லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலையை திருத்துவதில் அவதானம் செலுத்தியுள்ளது.

நாளை (6) காலை இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலை 5,080 ரூபாவாகும்.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் இன்று தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலையை 334 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 4,743 ரூபாவாகும்.

Leave a Reply