ஹமாஸின் ஏவுகணை தளத்தினை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுததாரிகளின் தளங்களை இலக்குவைத்து குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

பலஸ்தீன பகுதியில் இருந்து ஏவப்பட்ட தீப்பிழம்புகளுடன் கூடிய பலூன்களுக்கு பதிலளிக்கும் விதமாக குறித்த வான் வெளிதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

காசாவில் உள்ள ஹமாஸ் தரப்பினருக்கு சொந்தமான ஏவுகணை தளத்தினை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஹமாஸ் தரப்பிலிருந்து உடனடியான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் விமானங்களை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பீட் ஹனூன் மற்றும் ஜபல்யா உட்பட மூன்று தளங்கள்ளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *