ஜோன்சன் எண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

ஜோன்சன் எண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் ஒரு தவணை கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா  தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளதாவது, இந்தியாவின் தடுப்பூசி  செயற்றிட்டம் மேலும் விரிவடைந்துள்ளது.

புதிதாக ஜோன்சன் எண்ட் ஜோன்சன் ஒரு தவணைதடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதன்படி, இந்தியாவில் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்ஊடாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜோன்சன் எண்ட் ஜோன்சன்  நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது,  ”எங்களின் தடுப்பூசிக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவின் பயாலாஜிக்கல்  நிறுவனத்தோடு இணைந்து தடுப்பூசிகளை விநியோகம் செய்யவுள்ளோம்.

எங்களது தடுப்பூசிகளை 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 3 மாதங்கள் வரை சேமித்து வைத்திருக்க முடியும்.

ஆகவே  நீண்ட தொலைவிலுள்ள இடங்களுக்கு தடுப்பூசிகளை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply