ஈரோஸ் கட்சியின் வேட்பாளர் அறிமுகமும்,தேர்தல் அறிக்கையும்!

2023 இற்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிக்கையினையும் , வேட்பாளர்களையும் ஈரோஸ் ஜனநாயக முன்னனி தமது கட்சியின் தேர்தல் பணிமனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அறிமுகம்  செய்திருந்தது.

இந்நிகழ்வில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர், தலைவர், பொருளாளர், பிராந்தியச்செயலர் உட்பட கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் புதிய வடிவில் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *