இலங்கை மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிவிப்பு!

இலங்கை மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் இடம்பெற்றதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே இராணுவ தளபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

“ஜனாதிபதி தெளிவான ஆலோசனை வழங்கினார். ஏனைய நாடுகள் அவ்வாறு ஒன்று செய்தால் எங்கள் செய்ய நேரிடும் என ஜனாதிபதி கூறினார். அதற்கு அவசியமான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு உடனடியாக கோரிக்கை விடுக்குமாறு குறிப்பிட்டார்.

முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளை ஏனைய நாடுகளை விட முதலில் இலங்கை பெற்றுக் கொண்டமையினால் இன்று வரையில் ஒரு சிறந்த நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.

அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட குழுவிற்கு மாத்திரமின்றி அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்குவது அவசியமென்றால் உடனடியாக கோரிக்கை விடுக்க வேண்டும்.

Leave a Reply