இன்றைய ராசி பலன் | 01/01/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology

இன்றைய ராசி பலன் | 01/01/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology

மேஷம் – பேச்சிலும், செயலிலும் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும், மற்றவர்களுக்கு தப்பாக உங்களின் பேச்சு தெரியும் என்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும், குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

தொழில் ரீதியாக லாபகரமான பலனை அடையக்கூடிய நிலை இருந்தாலும், வேலை ஆட்களை சற்று அனுசரித்து செல்ல வேண்டியது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான பலன் இருந்தாலும், சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

ரிஷபம் – நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் குழந்தைகளால் மன அமைதி கிடைக்கும். வகை மற்றும் சொத்து வகையில் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை ஏற்படும் தனவரவு உண்டு. அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சற்று கால தாமதம் ஆகலாம். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலம்.

மிதுனம் – நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் எதிர்பார்க்கும். கல்லூரிகளில் அல்லது உயர்கல்விக்கான இடங்கள் கிடைக்கும். சிறப்பான நாளாக இன்றைய நாள் இருக்கும் உடல் நலம் சீராக இருந்துவரும்.

உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கூடும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். எதிர்கால சேமிப்பு களை உருவாக்குவது சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும்.

கடகம் – நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு சற்று சிரமங்கள் ஏற்படும் இருந்தாலும் இறுதியில் வெற்றி அடைவீர்கள். புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

பத்திரிக்கை மற்றும் மீடியா துறையில் உள்ளவர்களுக்கு சற்று பணிச்சுமை அதிகமாக இருக்கும் நிர்வாகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வயதானவர்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மை உண்டாகும்.

சிம்மம் – உங்களுடைய பலமும், பலவீனமும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் ஒரு ஏற்றம் மிகுந்த பலனைப் பெறலாம். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்னியம் சிறப்பாக இருக்கும்.

தொழிலில் ஒரு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், மற்றவர்களுடன் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

கன்னி – அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குச் சற்று பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், வெற்றிகரமாக எதிர்கொண்டு சிறப்பாக முடிப்பார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. திருமண காரியங்கள் மற்றும் சுப காரியங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தங்களுடைய முயற்சி வெற்றியடைய காண்பார்கள்.

துலாம் – நண்பர்களுக்கு தொழில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் கண் முன் வந்து செல்லும். அதை பயன்படுத்திக் கொள்ளவும் பத்திரிக்கை துறையில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

நிர்வாகத்தின் நற்பெயர் பெறுவீர்கள் விசா தொடர்பான காரியங்களில் உள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் குழந்தைப்பேறு சம்பந்தமான மருத்துவ சிகிச்சைகளை இன்று துவக்கலாம் நன்மையே உண்டாகும்.

விருச்சிகம் – நீங்கள் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலனை அடைவீர்கள். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்னைகள் விலகும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிரிகள் நீங்குவார்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியே ஒரு நல்ல விஷயங்கள் நடக்கும்.

தொழில் ரீதியாக பார்க்கும் போது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு தொழிலை விரிவுபடுத்துதல் போன்ற நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகத்தைப் பொறுத்த வரையில் உங்களுக்கு இருந்த வேலைப்பளு, பழிச்சொற்கள் விலகி நல்ல பெயரை எடுக்கலாம். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இருப்பினும் வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருப்பது நல்லது.

தனுசு – அன்பர்களுக்கு இன்றைய நாள் நாளாக அமைகிறது. சொந்தத் தொழில் செய்பவர்கள் சிறு சிறு பிரச்சினைகளைச் சந்திக்க வாய்ப்பு இருந்தாலும் வெற்றியை நோக்கிய பிரயாணம் ஆகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

பொறுமையைக் கைக்கொள்வது நல்லது. கோபத்தைக் குறைத்து குணத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். திருமணம் தொடர்பான காரியங்களில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் உள்ள வயதானவர்களுடன் சர்ச்சை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

மகரம் – நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் உண்டாகும்.

வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் .கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கும்பம் – உங்களுக்கு பல்வேறு வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல அனுகூலமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பார்க்கும் போது கடந்த கால தொழில் தடைகள் நீங்கி ஒரு வளமான நிலை ஏற்படும்.

உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், மற்றவர்களின் வேலையை எடுத்து செய்ய வேண்டிய நிலை இருக்கும். பேச்சிலும், செயலிலும் ஒரு வளமான பலனை அடைவீர்கள். பயணங்கள் மூலம் நன்மை உண்டாகும்.

மீனம் – நண்பர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சாதிப்பார்கள்.

உடல் அசதி அதிகமாக இருக்கும் இன்றைய இரவில் தூக்கம் நன்றாக கிடைக்கும். கணவன் மனைவி உறவு மேம்படும் பெண் பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள் ஆகும். வாகன வகையில் ஆதாயம் இருக்கும். ஒரு சிலர் புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்குவதைப் பற்றி திட்டமிடுவீர்கள்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply