சீனி, சிவப்பு பருப்பு உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் 10 ரூபாவினால் உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி மற்றும் சிவப்பு பருப்பு உள்ளிட்ட மேலும் சில பொருட்களின் விலைகள் ஒருவாரத்திற்குள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, தற்போது சிவப்பு பருப்பு கிலோவொன்றின் மொத்த விற்பனை விலையானது 180 ரூபாவாகவும், வெள்ளை சீனி கிலோவொன்றின் மொத்த விற்பனை விலையானது 140 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

சிவப்பு பருப்பு அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், சர்வதேச சந்தையில் தற்போது விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதன்காரணமாகவே உள்நாட்டு சந்தையிலும் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும், சீனி இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் உள்நாட்டு சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply