வவுனியாவில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று!

வவுனியாவில் 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (08.08.2021) வெளியாகின.

அதில், குட்செட் வீதி பகுதியில் இரண்டு பேருக்கும், ஹொரவப்பொத்தானை பகுதியில் ஒருவருக்கும், தாதியர் விடுதியில் ஒருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், முதலியார்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

Advertisement

கல்குண்டாமடு பகுதியில் ஒருவருக்கும், உளுக்குளம் பகுதியில் இருவருக்கும், பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் ஒருவருக்கும், உக்கிளாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் இருவருக்கும்,

பிரமனாலங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், பட்டானிச்சசூர் பகுதியில் ஒருவருக்கும், பட்டக்காடு பகுதியில் நான்கு பேருக்கும், கற்குழி பகுதியில் ஒருவருக்கும், காத்தார்சின்னக்குளம் பகுதியில் ஒருவருக்கும், இராசேந்திரங்குளம் பகுதியில் இருவருக்கும்,

பாரதிபுரம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் இருவருக்கும், புளியங்குளம் பகுதியில் இரண்டு பேருக்கும், பெரிய உளுக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், அரசடிக்குளம் பகுதியில் இருவருக்கும்,

நெடுங்கேணி பகுதியில் மூன்று பேருக்கும், வைத்தியர் விடுதியில் ஒருவருக்கும் என 39 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 6 நாட்களில் நேரியகுளம் பகுதியில் 73 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply