டெல்டாவுக்கு எதிரான இலங்கையின் போர் சுகாதார அமைப்பை சோர்வடையச் செய்துள்ளது – வைத்தியர்கள்

டெல்டா வகைக்கு எதிரான இலங்கையின் போர் நாட்டின் சுகாதார அமைப்பையும் அதிக சுமை கொண்ட வைத்தியசாலைகளையும் சோர்வடையச் செய்துள்ளது.

இது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் எதிர்வரும் மூன்று வாரங்களில் இந்த நிலை மேலும் மோசமடையும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் வாரங்களில் இன்னும் அதிகமான கோவிட் -19 இறப்புகள் பதிவாகும் என்பதோடு, ஏனைய நோய்களால் ஏற்படும் இறப்புகளும் அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது வைத்தியசாலைகளுக்குச் செல்ல பயப்படுகிறார்கள் என்பதோடு, ஒக்ஸிஜன் பற்றாக்குறையாலும் இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள முக்கியமான வைத்தியசாலைகளில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் அவதிபடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், எதிர்வரம் வாரங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரம் வரையில் அதிகரிக்கக்கூடும் என்றும் மரணங்களின் எண்ணிக்கையும் 200 ஐ எட்டும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply