யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு

யாழ்.பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல்போன இளைஞன், சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் (வயது 31) எனும் இளைஞனே சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, பண்ணை பாலத்தடியில் நண்பர்களுடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்தவேளையிலேயே தவறி விழுந்து காணாமல்போயுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த கடற்படையினர்  சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக  தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை,  பண்ணை பகுதியிலிருந்து குறித்த இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply