அடையாள அட்டைக்கான புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலைகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் வசூலிக்கும் காலம் 2022.03.31 ஆம் திகதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கால அவகாசம் பாடசாலைகளின் மற்றும் பிரிவேனாக்களின் அதிபர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களால் சான்றளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

Leave a Reply