தடயவியல் அறிவியல் மாநாட்டில் வட மாகாண ஆளுநர் பங்கேற்பு!

இந்தியா குஜராத் மாநிலத்தில் உள்ள உலகில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழங்களில் ஒன்றாக விளங்கும் காந்திஜி தேசிய தடயியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் (NFSU)  “25வது அகில இந்திய தடயியல் அறிவியல் மாநாட்டின் சிறப்பு அதிதியாக வடமாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டார்.

 

 நேற்று வியாழக்கிழமை குஜராத்தில் உள்ள உலகில் பிரசித்தி பெற்ற தடயியல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய தடையியல் பல்கலைக்கழகத்தின் 25வது  மாநாட்டு இடம் பெற்றது.

குறித்த மாநாட்டினை தேசிய தடயியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின்  தலைவர் நீதிபதி அருண்குமார் மிஸ்டர் தொடங்கி வைத்தார்.

 நிகழ்வில் ​​ஸ்ரீ பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஐபிஎஸ் டிரைக்டர் ஜெனரல், போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (பிபிஆர்&டி), புது டில்லி டாக்டர். ஜே.எம்.வியாஸ், துணைவேந்தர் டாக்டர் எஸ்.கே. ஜெயின், தலைமை தடயவியல் விஞ்ஞானி, தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகம் (DFSS) மேடையில் கலந்து கொண்டனர்.

 இதன்போது, ​​1வது “தடயவியல் ஹேக்கத்தான்-2023” வெற்றியாளர்களுக்கு ஆறு பிரிவுகளில் 50 இலட்சம் ரூபா பரிசாக பிரதம அதிதியால் வழங்கப்பட்டது.

Leave a Reply