
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
ஜெனீவாவில் நடைபெறும் 48 வது அமர்வின் தொடக்க நாளான செப்டம்பர் 13 ஆம் திகதி நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் அமர்வின் போது இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்கவுள்ளார்.
இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் இடம்பெற்றதான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலில் இருந்து விலகியிருந்தது.
அத்தோடு பேரவையின் தீர்மானம் 30/1 மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் பெப்ரவரி மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.