அரவிந்தகுமாரின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை: நிர்வாக சபையில் ஏகமனதாக தீர்மானம்!

பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தலைமையில் செயற்படுகின்ற ஜக்கிய தொழிலாளர் முன்னணி பதுளை மாவட்டத்தில் ஒரு சில பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மலையக மக்கள் முன்னணியின் தலைமைத்துவத்தின கீழ் இயங்குகின்ற மலையக தொழிலாளர் முன்னணியின் சந்தா பணத்தை அவர்களுடைய தொழிற்சங்க காரியாலயத்திற்கு அனுப்பி வைக்குமாறு கடிதம் மூலமாக அறிவித்திருப்பதானது தவறான நிதி மோசடி என்பதை மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி சுட்டிக்காட்ட விரும்புகின்றது.இது தொடர்பாக நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் என மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் நிர்வாக சபை கூட்டம் நேற்று (05.01.2023) தலவாக்கலை விருந்தகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜேசந்திரன் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சுப்பிரமணியம் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா பிரதி பொதுச் செயலாளர் க.சிவஞானம் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மலையக மக்கள் முன்னணி மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்,

எங்களுடைய கட்சியின் உறுப்பினராக இருந்த அ.அரவிந்தகுமார் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து அமைச்சராக செயற்படுகின்ற நிலையில் அவர் தற்பொழுது மலையக தொழிலாளர் முன்னணி அங்கத்தவர்களின் சந்தா பணத்தை அரவிந்தகுமார் தலைமைத்துவம் வகிக்கின்ற ஜக்கிய தொழிலாளர் முன்னணி என்ற அமைப்பினுடைய காரியாலயத்திற்கு அனுப்பிவைக்குமாறு அவருடைய தொழிற்சங்கத்தின் தொழில் உறவு அதிகாரி ஊடாக கடிதம் மூலமாக அறிவித்திருக்கின்றமையானது முற்றிலும் தவறானதும் நிதி மோசடியில் ஈடுபடுகின்ற ஒரு செயலாகவே இந்த செயற்பாட்டை மலையக மக்கள் முன்னணியும் மலையக தொழிலாளர் முன்னணியும் பார்க்கின்றது.இது தொடர்பான ஆவணங்களை நாம் எம்வசம் ஆதரமாக வைத்திருக்கின்றோம்.

இது தொடர்பாக நாம் மிகவிரைவில் சட்ட நடவடிக்கை எடுப்பதென இன்று நடைபெற்ற (05.01.2023) நிர்வாக சபை கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.இது ஒரு நிதி மோசடிக்கு உட்பட்ட செயலாகும்.இவர்களுடைய இந்த கடிதத்தின்படி எந்த ஒரு பெருந்தோட்ட கம்பனியாவது செயற்பட்டிருக்குமாக இருந்தால் அவர்களும் இந்த நிதி மோசடிக்கு துணைபோனவர்களாகவே நாம் கருதுகின்றோம்.எனவே அந்த பெருந்தோட்ட கம்பனிகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க நாம் தீர்மானித்திருக்கின்றோம்.எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *