திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மீட்கப்படும்-வடக்கையும் கிழக்கையும் பிரிக்கமுடியாது -விஜயகுமார் உறுதி!

வடக்கு கிழக்கு என்பது வெறுமனே மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளதே தவிர தமிழ் மக்களை பிரிக்கவில்லை என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரெழுச்சி போராட்டம் இன்றைய தினம் மூன்றாவது நாளாக முல்லைத்தீவில் அமைந்துள்ள, பண்டாரவன்னியன் சிலையிலிருந்து ஆரம்பமாகி பேரணி கிழக்கிற்குள் நுழைந்துள்ளது.

இதன் பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வடகிழக்கு மக்களாக அனைவரும் ஒன்றிணைந்தே இருப்பதாகவும் ஆனால் இங்கு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை அவதானிக்க முடிந்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம் என்றும் எனவே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மீட்கப்படவேண்டும் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வடக்கு கிழக்கு என்ற பிரிவு வெறும் வார்த்தையாகவே அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply