தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாஹ் யாருக்கும் தெரியாமல் எல்லோரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு அவர் மட்டும் இரவோடு இரவாக ரணிலுடைய பஸ்ஸில் ஏறி சென்று விட்டதாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம்.சபீஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
தேசிய காங்கிரஸ் தலைவர் தம்மை கிடாக்கள் என்று கூறியதை அறியவில்லை என்றும் அவருடைய பேட்டிகள் பத்திரிகையாளர் மாநாடுகளை அண்மைக்காலமாக எவரும் பார்ப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அவர் எத்தனை கட்சிகளில் இருந்து மாறினார் என்பது அவருக்கே தெரியும் என்றும் முஸ்லீம் காங்கிரஸில் இருந்து விலகி வந்த பின்னர் எத்தனை பேருடன் இணைந்து செயற்பட்டுள்ளார் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக மஹிந்தவிடம் இருந்து மைத்திரியிடமும் பின்னர் கோட்டபாய ராஜபக்சவிடம் சென்றார். கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் மர்ஹூம் அஸ்ரப் ரணிலுடைய பஸ்ஸில் ஏறக்கூடாது என எதிர்வு கூறி சென்றிருந்தார்.
ஆனால் அதாவுல்லாஹ் யாருக்கும் தெரியாமல் எல்லோரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு அவர் மட்டும் இரவோடு இரவாக ரணிலுடைய பஸ்ஸில் ஏறி அவர் சென்று விட்டதாகவும’
மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் ஆன்மா தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரை பார்த்து நீங்கள் செய்த வேலை கிடா அல்ல மடக்கிடா ஒன்று செய்த செயலுக்கு ஒப்பானதாகும் என பேசிக்கொண்டிருக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.