தீவிரவாதப் பிரிவினரே 13க்கு எதிர்ப்பு! மகாநாயக்க தேரர்கள் ஆதரவு! – முக்கியஸ்தர் தகவல்

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் முதலில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய போதிலும், அதனை ஜனாதிபதி விளக்கிய பின்னர், அதனை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தமது ஆதரவைப் பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தீவிரவாதப் பிரிவினர் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவாக இருப்பதாகவும் பெப்ரவரி 8ஆம் திகதி புதிய சபை அமர்வில் ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

Leave a Reply