மைத்திரியை கொல்லாமல் கொல்ல சிலர் முயற்சி! – பரபரப்பு தகவல்

தன்னை கொல்லாமல் கொல்வதற்கு சிலர் முயற்சிப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதாலேயே தன்னை இல்லாது செய்வதற்கு சிலர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நெல்சன் மண்டேலாவை 27 வருடங்கள் சிறையில் அடைத்தனர். அவர் மீண்டு வந்து நாட்டின் ஜனாதிபதியானார். 

பண்டாரநாயக்கவை கொலை செய்தனர். ஸ்ரீமாவோ அம்மையாரின் குடியுரிமையை பறித்தனர். தற்போது என்னை அழிக்க பார்க்கின்றனர். 

எனக்கு எதிராக கருத்துகளை வெளியிடுபவர்களின் பின்னணியில் வேறு நிகழ்ச்சி நிரல் உள்ளதாக மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply