இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான கலாச்சார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்காக தயாரிக்கப்பட்ட ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் வெளிவிவகார அமைச்சின் இணக்கமும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *