சுதந்திரக் கொண்டாட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை! – ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு

75வது தேசிய சுதந்திர தினத்தின் உத்தியோகபூர்வ அரச விழாவிற்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 11,130,011 ரூபா 29 சதம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அரச கொண்டாட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகையை விட இந்த ஆண்டு சுதந்திர தின விழாவிற்கு மிகக் குறைவான தொகையே அரசாங்கம் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கும் ஜனாதிபதி அலுவலகம், இந்த சுதந்திரம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொண்டாடப்பட்டது நாட்டின் பெருமையை மீட்பதற்கான தயார் நிலை குறித்த செய்தியை உலகிற்கு வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர வைபவத்திற்காக அரசாங்கம் 5.8 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும், கல்வி அமைச்சு சுதந்திர வைபவத்துக்கான ஆரம்ப செலவை மதிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் அந்த பணம் எதுவும் செலவிடப்படவில்லை எனவும் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply