வீரம் விளைந்த மண்ணில் துரோகிகளுக்கு ஒருபோதும் இடமில்லை – வேலன் சுவாமிகள் தெரிவிப்பு

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திலே காலத்திற்கு காலம் துரோகிகள் தோன்றி தமிழ் மக்களுடைய போராட்ட வரலாற்றை அழித்துள்ளதாக வேலன் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியானது இன்று காலை திருகோணமலை மாவட்டத்தின் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியை சென்றடைந்துள்ளது.

8500 மாவீரர்களின் வித்துடல்களை கொண்டுள்ள கிரான் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள வீரம் விளந்த மன்ணை இந்த பேரணி சென்றடைந்துள்ளது.

இந்த வீரம் விளைந்த பூமியிலே துரோகிகளுக்கு இடமில்லை எனவும் அவ்வாறான துரோகிகளை அடையாளம் கண்டு எதிர்வரும் காலங்களின் ஈழத்தமிழினம் விழிப்படைய வேண்டுமென வேலன் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply