திருட்டு ஜனாதிபதியின் பெருமைகளை உயர்த்துகின்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளமுடியாது! கஜேந்திரகுமார் திட்டவட்டம்

நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடரின் 1ஆவது அமர்வை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

திருட்டு அரசாங்கத்தினதும் திருட்டு ஜனாதிபதியினதும் பெருமைகளை உயர்த்துகின்ற நிகழ்வுகளில் தாம் கலந்து கொள்ள முடியாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முற்போக்கு கூட்டணி, மக்கள் காங்கிரஸ் என்பன பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

அத்துடன், நாளைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

மேலும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையும் குறித்த அமர்வை புறக்கணிக்கவுள்ளது.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடரை நாளையதினம் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன் நாளையதினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply