யாழ்ப்பாணத்தில் தலைசுற்ற வைக்கும் முருங்கைக்காயின் விலை!

வடக்கில் ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை ஆயிரம் ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 1200 – 1500 ரூபாயாக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்த நாட்களில் முருங்கைக்காய் விளைவிக்கப்படாத ஒரு காலப்பகுதி என்பதால் மன்னாரில் இருந்து வடக்கு சந்தைக்கு கொண்டு வரப்படும் முருங்கையின் விலை உயர்ந்துள்ளது. எனினும் யாழ்ப்பாணத்தில் ஏனைய மரக்கறிகளின் விலைகள் கணிசமாக குறைந்துள்ளன.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி, தம்புள்ளை தம்புத்தேகம ஆகிய மாகாணங்களின் மரக்கறிகள் வடக்கு சந்தையில் மொத்தமாக பெறப்பட்டதையடுத்து,

900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளியின் விலை 400 ரூபாவாகவும், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பூசணிக்காய் மற்றும் முட்டைக்கோஸ் கிலோ ஒன்றின் விலை 60 ரூபாவாகவும் 900 ரூபாய்க்கு விற்கப்பட்ட போஞ்சி விலை ஒரு கிலோ 160 ரூபாயாக குறைவடைந்துள்ளது.

Leave a Reply