பேரணில் குழப்பம் விளைவித்த சந்தேநபர் – மதத்தலைவர்களிடம் ஒப்படைப்பு

சமயத்தலைவர்களின் முயற்சியால் குழப்பம் விளைவிக்கவிருந்ததாக கருதப்படும் நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

சிலர் குழப்பம் விளைவித்தவரை தாக்கமுற்பட்டபோதும் மாணவர்கள் அந்த நபரை பாதுகாத்து சமயத்தலைவர்களிடம் ஒப்படைத்திருந்தனர்.

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியானது இறுதி நாளின் இறுதி நேரத்தை எட்டியுள்ள நிலையில் திடீரென குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது நடைபெற்று வருகின்றது

இறுதி நேரத்தில் பிரகடன உரையை நிகழ்த்துவதற்கு மாணவர்கள் தயாரான நிலையில் சிவப்பு மஞ்சள் கொடியினை எரிப்பதற்கு முற்பட்டிருந்த நிலையில் தடுக்கப்பட்டு குறித்த நபரை மாணவர்கள் சுற்றிவளைத்துள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இறுதி நிகழ்வும் பிரகடன உரையும் மட்டக்களப்பு காந்தி மைதானத்தில் முடிவடையும் எதிர்பார்க்கப்பட்டாலும் மக்களின் எழுச்சி மற்றும் திரள்நிலை காரணமாக பெவர் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

Leave a Reply