அதிகாரப்பரவலாக்கல் மூலம் நாடு பிரிந்துவிடுமா என்ற சந்தேகத்தை போக்கவே – பௌத்த பிக்குகளின் யாழ் விஜயம்!

தமிழர்களுக்கு வழங்கப்படவுள்ள அதிகாரப்பகிர்வு தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களும் அச்சமும் காணப்படுவதாகவும் அதனை நீக்குவதற்காகவே தென்பகுதியில் இருந்து இன்று மதகுருமார்கள் யாழிற்கு விஜயம் செய்திருந்ததாக யாழ்ப்பாண சர்வமதக்குழுவின் செயலாளர் அருட்பணி ஜசாக் டானியல் டிக்சன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றும் இதனை தென்பகுதியிலுள்ள சிங்கள மக்களுக்கு எடுத்து கூறவுள்ளதாக தென்பகுதியில் இருந்து வந்த 20 பேர் கொண்ட பௌத்த மதகுருமார்கள் தெரிவித்துள்ளதாக யாழ்ப்பாண சர்வமதக்குழுவின் செயலாளர் அருட்பணி ஜசாக் டானியல் டிக்சன் குறிப்பிட்டுள்ளார்

13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டுமென தென்பகுதியில் இருந்து வந்த 20 பேர் கொண்ட பௌத்த மதகுருமார்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண சர்வமதக்குழுவின் செயலாளர் அருட்பணி ஜசாக் டானியல் டிக்சன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்பதையும் பௌத்த மதகுருமார்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண சர்வமதக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று தென்பகுதியில் இருந்து வந்த 20 பேர் கொண்ட பௌத்த மதகுருமார்கள் வடமாகாணத்தில் இருக்கின்ற சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண சர்வமதக்குழுவின் செயலாளர் அருட்பணி ஜசாக் டானியல் டிக்சன் இதனை தெரிவித்திருந்தார்.

இன்று மாலை 4 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக கருத்துகளை பகிரவுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்ததாக யாழ்ப்பாண சர்வமதக்குழுவின் செயலாளர் அருட்பணி ஜசாக் டானியல் டிக்சன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply