வவுனியா அரசமுறிப்பு கிராமத்தில் விவசாய காணிகளுக்குள் நேற்று யானை புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது.
நேற்று இரவு குரக்கன், உழுந்து மற்றும் நெல் பயிரிடப்பட்ட காணிக்குள் வந்த யானை அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தியதுடன் பயிர்களையும் உண்டுள்ளது.
இதனை அவதானித்த விவசாயிகள் யானையை துரத்திய போதிலும் அது அருகில் உள்ள 4 ஏக்கர் தென்னந்தோட்டத்திற்குள் சென்று தென்னங்குருத்துக்களை உண்டதுடன், தென்னைகளை முறித்தும் சென்றுள்ளது.




இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.









