
வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் 63 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நான்குபேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப்பயணித்த காரை வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் கடமையில் இருந்த பொலிசார் வழிமறித்து அதில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த காரில் 63.84 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த சம்பவத்தில் காரில் பயணித்த தம்பதிகளான இருபெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர்களுடன் அவர்களது 4 மற்றும் 9 மாதக்குழந்தைகளும் காரில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் சாவகச்சேரி மற்றும் மதகுவைத்தகுளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஈரற்பெரியகுளம் உதவிப்பொலிஸ் பரிசோதகர் சுகந் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளனர் .