
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரானை சாதாரணமானதாகக் கருத வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸின் முந்தைய மாறுபாடுகளை விட ஒமிக்ரான் நோயாளர்களை கடுமையாக தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகின.
இந்த நிலையில், ஒமிக்ரான் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையானது சுகாதார அமைப்புகளைக் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
திங்களன்று, அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புதிய கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் ஒரு செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வாரத்தில் உலகளாவிய கொவிட் தொற்று எண்ணிக்கை 71% அதிகரித்துள்ளதாகவும் இவர்களில் 90% மானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
“முந்தைய வைரஸ் வகைகளைப் போலவே, ஒமிக்ரான் மக்களை மருத்துவமனையில் அனுமதிக்கக் காரணமாகும் அத்தோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும்.
அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்றுப் பரவல், உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளை நெறுக்கடியில் தள்ளும்.” என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.