பளையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பளை தர்மக்கேணி சந்தி பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பு நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்திய போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த நபர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் மோதியுள்ளார்.

குறித்த விபத்தில் காயமடைந்த நபர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது – எரிசக்தி அமைச்சர் திட்டவட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *