மசாஜ் நிலையம் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் – எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

கடமை நேரத்தின் போது மசாஜ் நிலையத்திற்கு சென்று அங்கு பெண்களின் சேவையைப் பெற்றுக்கொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெலிகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் எந்தவித அறிவிப்பும் இன்றி பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறி மசாஜ் நிலையத்திற்கு சென்றிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply