உலக சாதனை ஒன்றை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி ரணில்! – நக்கல் செய்யும் விமல்

மக்களின் ஆணையில்லாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மிக குறுகிய காலத்தில் அதிகளவான அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை ஒன்றை படைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றம் என்பது ஜனாதிபதி அக்கிராசன உரை தொடர்பான கனவுகளை நிறைவேற்று இடமல்ல. 

பொது பணத்தை செலவிட்டு அவற்றை செய்துக்கொண்டிருக்க இடமளிக்க தேவையில்லை.

இதன் காரணமாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில் செங்கோல் கொண்டு வரப்படும் போது அதற்கு மரியாதை செலுத்தி விட்டு, ஜனாதிபதி உரையாற்ற சென்ற போது, நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பும் செய்தோம்.

இதேவேளை கடந்த காலங்களில் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் சுதந்திர தின விழாவுக்கு 

இந்த முறை 40 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.

விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த முறை 40 கோடி ரூபாய் செலவானதாக அரசாங்கத்தின் அதிகார தரப்பினர் கூறுகின்றனர். 

இதன் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கை செலவு எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.

Leave a Reply